Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் தடைகள்..!

தமிழ்நாடு அரசு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை நீடிக்கும் தடைகள் குறித்து பார்ப்போம்.
 

tamil nadu government lists the actions which has restrictions till further announcement
Author
Chennai, First Published Aug 30, 2020, 8:38 PM IST

தமிழ்நாடு அரசு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நிறைய தளர்வுகளை அறிவித்துள்ளது. தளர்வுகளை அறிவித்துள்ள அதேவேளையில், மறு உத்தரவு வரும்வரை சில விஷயங்களுக்கான தடைகள் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மறு உத்தரவு வரும் எவற்றிற்கெல்லாம் தடை நீடிக்கும் என பார்ப்போம்.

1. பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.

2. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

3. மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். 

4. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து 

5. மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios