Asianet News TamilAsianet News Tamil

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்த தமிழக அரசு... மீறினால் கடும் நடவடிக்கை..!

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government announces the time of crackers
Author
Tamil Nadu, First Published Oct 23, 2019, 1:20 PM IST

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசு படுவதை தவிர்க்கும் வகையில், தீபாவளி நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என 2018-ம் ஆண்டு 
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று, 2018 தீபாவளி நாளில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வடரையும், மாலை, 7 மணிமுதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டது. தடையை மீறி கடந்த ஆண்டு பட்டாசு வெடித்த பொதுமக்கள் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். 

Tamil Nadu Government announces the time of crackers

இதையும் படிங்க;-  ஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..!

இந்தாண்டு தீபாவளி பண்டிகை, 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், நடவடிக்கை எடுத்துள்ளது. Tamil Nadu Government announces the time of crackers

இதுதொடர்பாக தமிழக அரசு கூறுகையில், தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios