ஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..!
திண்டுக்கல் அருகே சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ராணுவ வீரர் தனது திருமணத்துக்கு இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ராணுவ வீரர் தனது திருமணத்துக்கு இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திரவியம் மனைவி அருள் சத்யா தேவி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், திரவியத்தின் அண்ணன் மகன் பீட்டர் (28) என்பவருக்கும் சித்தி அருள்சத்யாதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.
இதனிடையே பீட்டர் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்து விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகையால், சொந்த ஊருக்கு வந்திருந்தார். ஆனால், சித்தி அருள் சத்யாதேவி தன்னை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று பீட்டரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருமணத்திற்கு இடையூறாக இருந்த சித்தியை கொலை செய்ய பீட்டர் முடிவு செய்தார். அதன் படி உன்னுடன் தனியாக பேச வேண்டும் என்று கூறி சித்தியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். அவரிடம் நைசாக பேசிக் கொண்டு திருமணத்துக்கு சம்மதிக்குமாறு கூறினார். ஆனால், அவர் என்னை மீறி திருமணம் செய்தால் பெண் வீட்டாரிடம் அனைத்து உண்மையையும் சொல்லிவிடுவேன் என மிரட்டினார். இதனால், ஆத்திரமடைந்த பீட்டர் சித்தியை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார்.
சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது பெண் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பீட்டர் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.