மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சிவசங்கர் பாபாவுக்கு அடுக்கடுக்கான கண்டிஷன் போட்டு ஜாமீன் வழங்கிய கோர்ட்..!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிவ சங்கர் பாபா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்குகளில் இரண்டு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
இவ்வழக்கு கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்குவது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
ஜாமீன்
ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்க முற்படக் கூடாது. குற்றம் தொடர்புடைய பள்ளி வளாகத்துக்குள் சிவசங்கர் பாபா நுழையக் கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை சாட்சியங்களை கலைக்க முற்பட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
இதையும் படிங்க;- மாணவர்களை கதற விட்ட 45 வயது ஆசிரியை.. ‘வாங்க பழகலாம்’ என்ற பெயரில் குரூப்.. உல்லாச வீடியோக்கள்.. பணம் பறிப்பு