திடீர் தொழில்நுட்பக் கோளாறு.. முடங்கியது மெட்ரோ ரயில் சேவை.. பொதுமக்கள் கடும் அவதி..!
சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அதிக நாட்டம் இல்லாத பொதுமக்கள் தற்போது பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அதிக நாட்டம் இல்லாத பொதுமக்கள் தற்போது பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரியில் 66 லட்சம் பேரும், பிப்ரவயில் 63 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க;- 3 பள்ளி மாணவர்கள் உயிரை பறித்த தனியார் கல்லூரி மாணவன் கைது.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே இன்று காலை திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், வேலைக்கு சொல்வோர் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க;- சென்னையில் செல்போன் பேசி படி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி.. ரயில் மோதியதில் உடல் சிதறி பலி..!
இந்நிலையில், தற்போது சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சேவை தொடங்கி உள்ளது. ஆனால், 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என்ற அடிப்படையில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தை அடைவதற்கு பயணிகள் ஆலந்தூர் வழிதடத்தை பயன்படுத்துமாறு மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.