பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்… சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் பரபரப்பு!!

சென்னையில் தனியார் விடுதியில் பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

students who ate biryani vomited and fainted in chennai

சென்னையில் தனியார் விடுதியில் பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் தங்கி மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவிகள் தங்கி படிக்கும் விடுதியில் நேற்று மாணவிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரரர்களுக்கு ஆயிரம் ரூபாய்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் !!

அசைவம் மற்றும் சைவ பிரியாணி வழங்கப்பட்டது. அதில் அசைவ பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு திடிரென வந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் சைவ பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு எதும் ஏற்படாவிட்டாலும் அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: பால் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு !

இதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு மாணவிகள் சில மணி நேரத்தில்  விடுதிக்கு திரும்பினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கூட ஓட்டேரியில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios