Asianet News TamilAsianet News Tamil

ஒரே போன்கால்.. திமுக எம்பி தயாநிதி மாறனிடம் பணம் சுருட்டல்.. பணம் மீண்டும் கிடைத்தது.. எப்படி தெரியுமா?

மத்திய சென்னை தி.மு.க எம்.பி தயாநிதி மாறனிடம் சைபர் மோசடி பேர்வழிகள் தங்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Stolen money recovered from DMK MP Dayanidhi Maran's bank account: Axis Bank explanation-rag
Author
First Published Oct 11, 2023, 8:42 PM IST

திமுக எம்பி தயாநிதி மாறனின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளார்.

இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட தயாநிதி மாறன் எம்.பி வங்கி கணக்கு விவரங்களை தராமல் அந்த இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் அடுத்த சில நொடிகளில் தயாநிதி மாறன் எம்பியின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் ஒன்று வந்தது.

Stolen money recovered from DMK MP Dayanidhi Maran's bank account: Axis Bank explanation-rag

அதில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ. 99 ஆயிரத்து 999 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் இடம் பெற்றிருந்தது. மோசடி சம்பவம் குறித்து தயாநிதி மாறன் எம்.பி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். 

வங்கி விவரங்கள், ஓ.டி.பி எண் எதையும் பகிராமல் தனது வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டது குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பதிவிட்டார். இது பெரும் சர்ச்சை ஆனது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வங்கி இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. 

அதன்படி, “ திமுக எம்பி தயாநிதி மாறான் வங்கி கணக்கில் எடுக்கப்பட்ட ரூ. 1 லட்சம் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தரப்பில் இருந்து யாரும் போன் செய்யவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios