சென்னையில் நாளை பள்ளிகள் இயங்குமா? வெளியான முக்கிய தகவல்..!

சென்னையில் மாண்டல் புயல் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Schools will open tomorrow in Chennai

சென்னையில் மாண்டல் புயல் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாளினை ஈடு செய்திடும் பொருட்டு நாளை(சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- ஓஹோ இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா? வச்சு செய்யும் டிடிவி.தினகரன்.!

,Schools will open tomorrow in Chennai

அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்துவகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  TNPSC DEO Recruitment 2022: பி.எட். முடித்தவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறையில் வேலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios