Asianet News TamilAsianet News Tamil

ஓஹோ இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா? வச்சு செய்யும் டிடிவி.தினகரன்.!

ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.

aavin ghee price has been increased..TTV.Dhinakaran condemned
Author
First Published Dec 16, 2022, 1:48 PM IST

ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

திமுக அரசு பதவியேற்றதில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆவின் பால் விலையை உயர்த்தியது. இந்நிலையில், ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். 

இதையும் படிங்க;- ஆவின் நெய் ஒரு லிட்டருக்கு ரூ 50 உயர்வு..! 9 மாதத்தில் 3வது முறையாக விலை அதிகரிப்பு- அதிர்ச்சியில் பொதுமக்கள்

aavin ghee price has been increased..TTV.Dhinakaran condemned

இந்நிலையில், பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துள்ளது. 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340 லிருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

aavin ghee price has been increased..TTV.Dhinakaran condemned

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.ததினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.

 

ஒரே ஆண்டில்  மூன்று முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115/- வரை அதிகப்படுத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதான் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;-  இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் தமிழகம்... 5வது ஆண்டாக NO.1 மாநிலமாக நீடிப்பு..!

Follow Us:
Download App:
  • android
  • ios