எந்த நேரத்துல என்ன நடக்கமோ? மரண பயத்தில் 490 குடும்பங்கள்! இடிந்து விழும் நிலையில் 17 மாடி குடியிருப்பு வீடு
சென்னை சாலிகிராமத்தில் 4.65 ஏக்கர் நிலத்தில் ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர் என்ற பெயரில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு 2011ம் ஆண்டு சி.எம்.டி.ஏ.விடம் ஒப்புதல் பெறப்பட்டது.
சென்னை சாலிகிராமத்தில் இடிந்து விழும் அபாயத்தில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் மரண பயத்தில் இருந்து வருகின்றனர்.
சென்னை சாலிகிராமத்தில் 4.65 ஏக்கர் நிலத்தில் ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர் என்ற பெயரில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு 2011ம் ஆண்டு சி.எம்.டி.ஏ.விடம் ஒப்புதல் பெறப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதை அடுத்த 2015ம் ஆண்டு பணி நிறைவு சான்றிதழை சி.எம்.டி.ஏ. வழங்கியது. இங்கு கட்டப்பட்ட 630 வீடுகளில் 490 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.
இதையும் படிங்க;- சென்னையில் சோகம்.. தன் உயிரை கொடுத்து மகள்களை காப்பாற்றிய தாய்.. நடந்தது என்ன?
இந்நிலையில், இந்த வளாகத்தில் பெரும்பாலான வீடுகளின் சுவர்கள், துாண்கள், பீம்களில் மேற்கூரையில் முதலில் விரிசல்கள் ஏற்பட்டது. பல இடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுவதாக புகார் எழுந்தது. முதலில் சிறிதளவே இருந்த இந்த பிரச்சனை நாளடைவில் அதிகமானது. இதனால் குடியிருப்புவாசிகள் தினமும் எந்த நேரத்தில் என்னவாகுமோ என்ற அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது.
இதையும் படிங்க;- செம ஹேப்பி நியூஸ்! வரும் 16ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு.!
இந்நிலையில் கட்டிடத்தின் நிலைமை மோசமடைந்ததால் அது குறித்து மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து சான்றிதழ் அளித்த கட்டட அமைப்பியல் பொறியாளர் மீது விரைவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.