MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னையில் சோகம்.. தன் உயிரை கொடுத்து மகள்களை காப்பாற்றிய தாய்.. நடந்தது என்ன?

சென்னையில் சோகம்.. தன் உயிரை கொடுத்து மகள்களை காப்பாற்றிய தாய்.. நடந்தது என்ன?

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் வருவதை அறியாமல் சென்ற மகள்களை தண்டவாளத்தில் இருந்து காப்பாற்றி விட்டு தாய் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Aug 08 2023, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா. இவருக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தி.நகர் சென்று  ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தங்களது வீட்டுக்கு செல்வதற்காக  3 பேரும் தி.நகரில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வந்துள்ளனர். 

23

பின்னர், வேளச்சேரி மார்க்கம் செல்லும் பறக்கும் ரயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை  தனது இரண்டு மகளுடன் சித்ரா கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக மின்சார ரயில் வந்து கொண்டிருப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்த  சித்ரா ஒடிச்சென்று மகள்களை தண்டவாளத்திலிருந்து தள்ளிவிட்டு காப்பாற்றியுள்ளார். ஆனால், தாய் சித்ரா மீது ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?

33

இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;- செம ஹேப்பி நியூஸ்! வரும் 16ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு.!

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
ரயில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Recommended image2
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Recommended image3
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved