சென்னையில் 14வது மாடியில் இருந்து குதித்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை.. வெளியான பரபரப்பு தகவல்.!
சென்னையில் டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள சஞ்சய் அரோரா வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் 14வது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள சஞ்சய் அரோரா வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் 14வது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் மேற்கு நடேசன் நகரில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் டெல்லியில் போலீஸ் கமிஷனராக உள்ள சஞ்சய் அரோராவிற்கு சொந்தமான வீடு உள்ளது. சஞ்சய் அரோரா தற்போது டெல்லியில் வசித்து வருவதால் அவரது வீட்டை தூத்துக்குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மதுசூதன ரெட்டி (69) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். மதுசூதன ரெட்டி கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இதையும் படிங்க;- குளிர்பானம் குடித்து பஸ்சில் மயங்கிய சென்னை சிறுவன் தாயின் மடியில் பலி.. நெஞ்சில் அடித்து கதறிய பெற்றோர்.!
இந்நிலையில், மதுசூதனன் தனது வீட்டின் பால்கனியில் நேற்று நின்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மதுசூதனன் அங்கிருந்து கீழே குதித்தார். இதில், படுகாயமடைந்த மதுசூதன ரெட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததார். இதைப் பார்த்த அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மதுசூதனன் ரெட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மதுசூதனன் ரெட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால், அவரது மகள் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையினால் பிரிந்து வந்ததும், அதனால் மிகுந்த வேதனையுடன் மதுசூதனன் ரெட்டி இருந்து வந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக அவர், தற்கொலை செய்துக் கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, மதுசூதனன் ரெட்டி, தனது தற்கொலை தொடர்பாக எழுதி வைத்திருந்த 8 பக்க கடிதத்தை கைப்பற்றியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.