மாமியார், மருமகள் சண்டையில் தனியார் வங்கி மேலாளர் தற்கொலை; காவல்துறை விசாரணை
மாமியாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனியார் வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். இவருடைய மனைவி சாந்தா சீலா. இவர் கிண்டியில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் இளவரசனின் அம்மா செல்லம்மாளும் தங்கி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையை சைவ, வைணவ சமய நலத்துறை என பிரிக்க வேண்டும் - திருமா அறிவுரை
சாந்தா சீலாவுக்கும் மாமியார் செல்லம்மாளுக்கும் அடிக்கடி தகராறு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாமியாருக்கும், மருமகளுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் படுக்கை அறை உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டு நீண்ட நேரம் சாந்தா சீலா வெளியே வராததால் மாமியார் செல்லம்மா நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளளார்.
சந்தேகம் அடைந்த செல்லம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுக்கை அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது
தகவல் அறிந்து விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தனியார் வங்கி துணை மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.