சென்னையில் ரேஸ் பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட போக்குவரத்து காவலர் துடிதுடித்து பலி

சென்னை போரூர் அருகே ரேஸ் பைக் மோதிய விபத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

police man died road accident in chennai vel

காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (வயது 53). இவரது மனைவி விஜயலட்சுமி, அரசுப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், குமரன் போரூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் குமரன் இன்று இரும்புலியூர், புழல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து புழல் நோக்கி ரேஸ் பைக்கில் அதிவேகமாக வந்த நபர் குமரன் மீது வேகமாக மோதினார்.     

வெளியூர்காரனுக்கு இங்க என்னடா வேலை? காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற நபர் அடித்து கொலை

இந்த விபத்தில் குமரன், ரேஸ் பைக்கில் வந்த நபர் என இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் குமரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து காவல் துறையினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ரேஸ் பைக் ஓட்டுநர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

கர்ப்பிணியை நிர்வாணமாக்கி சாலையில் நடக்கவைத்த கொடூரம்; ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரேஸ் பைக்கில் வந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios