Asianet News TamilAsianet News Tamil

கிடுகிடுவென உயரும் பெட்ரோல் விலை..! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!

பெட்ரோல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.

petrol rate increases continuously
Author
Tamil Nadu, First Published Nov 10, 2019, 11:59 AM IST

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

petrol rate increases continuously

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 21 காசுகள் உயர்ந்து 75.92 ரூபாயாக இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 1 லிட்டர் டீசல் விலை 69.67 ரூபாயாக நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது.

petrol rate increases continuously

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வந்தது. அதன்பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இடையிடையே விலை குறையவும் செய்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க தொடங்கியிருப்பது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:  மறைந்த அதிமுக பிரமுகருக்கு திமுக பொதுக்குழுவில் அஞ்சலி..! ஸ்டாலின் அதிரடி..!

Follow Us:
Download App:
  • android
  • ios