Asianet News TamilAsianet News Tamil

ADMK EPS Protest: கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி; அதிமுக.வுக்கு முழு ஆதரவு தெரிவித்த சீமான்

தமிழக சட்டப்பேரவையில் பேசுவதற்று அனுமதி மறுத்ததோடு அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்த திமுக அரசுக்கு எதிரான அதிமுக.வின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு.

ntk chief coordinator seeman support aiadmk hunger strike in chennai vel
Author
First Published Jun 27, 2024, 4:16 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம்  செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின்  எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். 

முதல் திருமணத்தை மறைக்க அடுக்கடுக்கான பொய்; ஒரே ஒரு ஸ்டேட்டஸ் - மொத்த பிளானும் குளோஸ்

இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து   எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள்  தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios