மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, சங்பரிவார்கள் நடத்தும் நிகழ்ச்சி அல்ல, அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்தும் மாநாடு என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சங்பரிவார்கள் நடத்தும் நிகழ்ச்சி கிடையாது
முருகன் மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய மாநாடாக இருக்கும் என எல்.முருகன் கூறியுள்ளார். கோவை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டியளிக்கையில்: மதுரையில் வரும் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாடு பாஜக நடத்தும் நிகழ்ச்சி கிடையாது, சங்பரிவார்கள் நடத்தும் நிகழ்ச்சி கிடையாது. அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்தக்கூடிய மாநாடு.
வெற்றிவேல் யாத்திரைக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு
கந்த சஷ்டி கவசத்தை எப்படி இழிவுபடுத்தினார்கள். வெற்றிவேல் யாத்திரைக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். திருப்பரங்குன்றத்தில் நடந்த விசயங்கள் அனைவரும் அறிந்தது. அதுபோல், இந்து மக்களுக்கு எதிரான விசயங்கள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே, இந்துக்கள் தங்களுக்கான ஒரு ஒற்றுமைக்கான தளமாக முருகன் மாநாட்டை முருக பக்தர்கள் பார்க்கிறார்கள். அதற்காக ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
முருக பக்தர் மாநாடு
முருகன் மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய மாநாடாக இருக்கும். குஜராத்தில் சௌராஷ்ட்ரா தமிழ்ச்சங்கம் நடத்தி உள்ளோம் வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நடத்தியுள்ளோம். இதனை ஒவ்வொரு வருடம் நடத்தி வருகிறோம். முருக கடவுள் தமிழ் கடவுள் என்பதால் முருக பக்தர் மாநாடு தமிழகத்தில் நடத்துகிறோம். இதில் தமிழர்கள் கலாச்சாரம், ஒற்றுமை, வீர விளையாட்டு, இலக்கியங்களை காட்சிப்படுத்துகிறோம். தமிழர்களின் கலாச்சாரத்தை உத்திர பிரதேச மக்கள் எப்படி கொண்டாடி வருகிறார்கள் என்பதை அவர்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும் என எல்.முருகன் கூறினார்.
