10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு.. அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்.!
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு தேர்வு
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க;- குட் நியூஸ் ! 10, 11, 12 பொதுத்தேர்வு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!
அரசுத் தேர்வுகள் இயக்கம்
அதில், 10-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கு ஜூன் 17-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் வெளியிடுவது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க;- மாணவர்கள் கவனத்திற்கு ! 6 முதல் 9 பொதுத்தேர்வு எப்போது ? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் !
பெயர்ப் பட்டியல் பதிவிறக்கம்
அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. தேர்வெண் பட்டியலை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.