நீட் தேர்வில் தவறுகளே நடக்கவில்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் - அமைச்சர் விமர்சனம்
நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு சட்டத்துறையிலும் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா சிகிச்சையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த பிப்ரவரி 25ம் தேதி மூத்தோர் நல மருத்துவமனையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். 8.46 ஏக்கர் நிலப்பரப்பில் 200 படுக்கைகள், 40 தீவிர சிகிச்சை படுக்கைகள், இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
முதியோர்களுக்கு கேரம், பல்லாங்குழி போன்ற விளையாட்டு உபகரணங்களும் இங்கு இருக்கின்றன. மேலும் புதிதாக முதியோர்களுக்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பக்க விளைவு இல்லாத சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது, உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, வாழையிலை குளியல், நீர் சிகிச்சை, அக்கு பஞ்சர், மன நல ஆலோசனை போன்றவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் கோபமடையாமலும், அச்சமின்றி இருக்க இந்த பயிற்சிகள் ஒரு உதவியாக இருக்கும். பல்வேறு சிகிச்சைகளை தொடங்குவதில் இந்த அரசு பெருமை கொள்கிறது.
பாஜகவில் இருப்பவர்கள் குற்ற பின்னணி உள்ளவர்களா? தமிழிசைக்கு திருச்சி சூர்யா நேரடி சவால்
நீட் தேர்வு தொடர்பாக நான் 10 முறைக்குமேல் நீட் விலக்கிற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். ஒன்றிய அரசின் சார்பில் குறிப்பாக குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கு இங்கிருந்து நிறைவேற்றப்பட்ட மசோதா, உள்துறை அமைச்சகத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருக்கின்ற உயர்கல்வித் துறைக்கும், மருத்துவக் கல்வித்துறை நிர்வாகத்திற்கும் தொடர்ந்து 7 முறை சிறிய சிறிய விளக்கங்களை கேட்டு பதில் கடிதம் அனுப்பினர். சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி அதற்கான பதிலையும் முறையாக அனுப்பி வைத்திருக்கிறோம். எனவே மத்திய அரசு குடியரசு தலைவரிடத்தில் சொல்லி மாநில அரசுகள் விரும்புகிற வகையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு தரவேண்டும் என்கின்ற வகையில் முடிவெடுப்பார்கள் என்று கருதுகிறோம்.
நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் 67 மாணவர்கள் எடுத்துள்ளனர். தேர்விற்கான மதிப்பெண்கள் வழங்கும் விதிமுறைப்படி மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கினாலும் 718, 719 என மதிப்பெண்கள் வராது. 716 அல்லது 715 என்ற முறையில் தான் வரும். நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதுபோன்று வழங்குவதற்கு எப்பொழுது உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது என்பது குறித்து எந்த வித தெளிவான விளக்கமும் இல்லை. தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கத்தினை ஏற்க முடியாது.
நீட்டுக்கு எதிரான போராட்டம் என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் தவறு நடக்கவில்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. நீட் தேர்வில் குளறுபடிகள் குறித்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்வது குறித்து சட்ட துறையுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
5 தலைமுறையாக எங்கள் வாழ்விடம்; 15 நாட்கள் தான் கெடு - கண்ணீரோடு முறையிடும் மாஞ்சோலை மக்கள்
தமிழகத்தில் 36 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி செயல்படுத்த அதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் 6 மருத்துவ கல்லூரி தமிழகத்திற்கு வர வேண்டும். புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சரிடம் ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தி உள்ள கோரிக்கைகளை நேரில் பார்க்கும்போது மீண்டும் வலியுறுத்தப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.