கட்டாயப்படுத்தி எம்பிபிஎஸ் படிக்க வைத்த பெற்றோர்.. மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி.!
சென்னை போரூர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவர் மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியான முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி டீன் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் மருத்துவர்.
கட்டாயப்படுத்தி பெற்றோர் மருத்துவ கல்லூரி படிக்க வைத்ததால் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவர் மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியான முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி டீன் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் மருத்துவர். இவரது மகள் ஷைலா(21) அவரது தந்தை பணியாற்றி வரும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? இதோ பெரிய லிஸ்ட்.!
இந்நிலையில், மாணவி ஷைலா மாடியில் இருந்து நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே மாடிக்கு சென்று பார்த்தபோது மாணவி ஷைலா அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியதை கண்டு அலறி கூச்சலிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷைலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது ஷைலாவுக்கு மருத்துவப் படிப்பில் சேர விருப்பமில்லாத நிலையில் அவரது பெற்றோர் வற்புறுத்தலால் மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக, நீண்ட நாட்களாவே மன உளைச்சலில் இருந்த ஷைலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- சென்னையில் சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! பாஜக முக்கிய நிர்வாகி பெட்ரோல் குண்டு வீசி! அரிவாளால் வெட்டி படுகொலை.!