Asianet News TamilAsianet News Tamil

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? இதோ பெரிய லிஸ்ட்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

chennai power cut on  april 28 see list of areas
Author
First Published Apr 28, 2023, 9:07 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமாபுரம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

ராமாபுரம் பகுதி:

ஐபிஎஸ் காலனி, ராமாபுரம் முழுவதும், மணப்பாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், வெங்கடேஸ்வரா நகர், பூத்தப்பேடு, நெசப்பாக்கம், ராமச்சந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர் & கான் நகர்.

தாம்பரம் பகுதி:

கடப்பேரி சிட்லபாக்கம் 1வது பிரதான சாலை, ராமச்சந்திரா சாலை, பத்மநாபா தெரு, கண்ணதாசன் தெரு, சீனிவாச நகர், எம்ஐடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

வியாசர்பாடி பகுதி:

மத்தூர் மஞ்சம்பாக்கம் அனைத்து தெரு, அசிசி நகர் அனைத்து தெரு, செட்டிமேடு, சீனிவாச நவீன நகரம், MMDA முழு பகுதி, சின்னசாமி நகர், காமராஜர் சாலை மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்.

கிண்டி பகுதி:

ராமாபுரம் ஐபிசி காலனி, மணப்பாக்கம், கொளப்பாக்கம், பூதப்பேடு, நெசப்பாக்கம், எம்ஜிஆர் நகர் பகுதி, கே.கே.பொன்னுரங்கம் சாலை (வளசரவாக்கம்) நங்கநல்லூர் பி.வி.நகர் (10வது முதல் 19வது தெரு), நேரு காலனி, என்ஜிஓ காலனி, சுப்பிரமணியன் நகர், சபாபதி நகர், பள்ளிக்கரணை மடிப்பாக்கம், எல்ஐசி நகர் முழுவதும், டிஜி நகர் புழுதிவாக்கம், பொன்னியம்மன் கோயில் தெரு, புழுதிவாக்கம் பஞ்சத் போர்டு அலுவலகம், பொன்னியம்மன் கோயில் தெரு, நங்கநல்லூர் வானுவம்பேட்டை ஆண்டாள் நகர் 1வது மெயின் ரோடு, நேதாஜி நகர், ஆலந்தூர்  ஏரிக்கரை தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11வது தெரு மற்றும்  சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios