சென்னை தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு(26). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(25).  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சென்னை அடையாறு எல்பி சாலையில் சிமெண்ட் மிக்சர் லாரி மோதியதில், கணவர் கண் முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு(26). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(25). காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் 2ம் ஆண்டு பிபிஏ படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை ஹேமலதா சென்னை பெரம்பூரில் தனது தாய் வீட்டிற்குச் செல்வதற்காக, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இதையும் படிங்க;- அதிக லாபம் ஈட்டும் சென்னை விமான நிலையம்! நாட்டிலேயே 2வது இடம் பிடித்து அசத்தல்!

அப்போது அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்.!

அப்போது ஹேமலதா தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில், கணவன் கண் முன்பே சம்பவ இடத்திலேயே ஹேமலதா துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹேமலதா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.