கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவுக்கு இது தான் காரணமா? கதறியபடி நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள்.!

சென்னை அம்பத்தூர் லெனின் நகர் 15வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பகத்சிங். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவரது மகன் முருகேசன் (45). மனைவி ஜெயந்தி (40). இவர்களுக்கு பத்மஸ்ரீ (16), புனிதன் (14) என்ற மகள், மகன் உள்ளனர். 

Loss of several lakhs in share market.. husband and wife suicide in chennai

ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் கணவர், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூர் லெனின் நகர் 15வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பகத்சிங். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவரது மகன் முருகேசன் (45). மனைவி ஜெயந்தி (40). இவர்களுக்கு பத்மஸ்ரீ (16), புனிதன் (14) என்ற மகள், மகன் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் டிசைனராக வேலை பார்த்து வந்த முருகேசன் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டு வந்தார். 

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. திருமண விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழப்பு.!

Loss of several lakhs in share market.. husband and wife suicide in chennai

இவர்களுக்கு செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டை பகுதியில் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு விட்ட நிலையில் மற்றொரு பகுதியில் முருகேசன் மற்றும் பகத்சிங் ஆகியோர் அவ்வப்போது வந்து தங்கி விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் முருகேசன் ஜெயந்தி ஆகியோர் எல்லையம்மன் பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளனர். மறுநாள் காலை வரைக்கும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பகத்சிங் முருகேசனின் செல்போன் எண்ணை பலமுறை தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை.

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தாலி கட்டிய கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!

Loss of several lakhs in share market.. husband and wife suicide in chennai

அப்பகுதியில் உள்ள ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்ட பகத்சிங் வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். இதையடுத்து, கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது முருகேசனும், ஜெயந்தியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுதொடர்பாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios