சென்னையில் அதிர்ச்சி.. திருமண விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழப்பு.!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி (21). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவரது தோழியின் சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.  

College student dies while dancing at wedding ceremony function in chennai

சென்னையில் திருமண விழாவில் நண்பர்களோடு சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி (21). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவரது தோழியின் சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், நண்பர்களுடன் சத்யசாய் ரெட்டி கலந்துகொண்டு,  அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க;- டீச்சரை மடக்கிய ஆட்டோ டிரைவர்.. திருமணமானதை மறைத்து ஆசைத்தீர உல்லாசம்! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய கொடூரம்

College student dies while dancing at wedding ceremony function in chennai

அப்போது, திடீரென சத்யசாய் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு காதில் இருந்து ரத்தம் வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மற்றும் திருமண விழாவில் வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதையும் படிங்க;-  என்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்கிட்டாரே.. என் வாழ்க்கையை நாசம் செஞ்சவங்கள தூக்குல போடுங்க.. ஜெகன் மனைவி கதறல்

College student dies while dancing at wedding ceremony function in chennai

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியில் சக நண்பர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சத்யசாய் ரெட்டியின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios