டீச்சரை மடக்கிய ஆட்டோ டிரைவர்.. திருமணமானதை மறைத்து ஆசைத்தீர உல்லாசம்! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய கொடூரம்
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் ஜாபரை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தட்டிக்கழித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பொண்டலவாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பள்ளிக்கு தினமும் நடிமிட்டோட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர்வாலி (30) என்பவரின் ஆட்டோவில் சென்று வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஜாபர் தனக்கு திருமணமானதை மறைத்து ஆசிரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்தை கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் ஜாபரை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தட்டிக்கழித்துள்ளார். மேலும், சந்திப்பதை தவிர்த்துவிட்டு செல்போனை சுவிட்ச்ஆப் செய்துள்ளார். இதனையடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறியதை அடுத்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.
என் வாழ்க்கையை நாசம் செய்ததால் ஜாபர்வாலி தன்னை 2வதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி கதறியபடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, ஜாபர்வாலியின் உறவினர்கள் அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஜாபர்வாலி, காதலியை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி காதலிக்கு போன் செய்து உன்னை இந்து முறைப்படியே திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி அழைத்துள்ளார். இதை நம்பி அந்த இளம்பெண்ணும் வந்துள்ளார். அங்கு மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருக்கும்படி கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் திருமணம் செய்த பிறகுதான் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜாபர்வாலி இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் அணிந்திருந்த துணிகளை கழற்றி அங்குள்ள ஏரிக்கரையில் சடலத்தை புதைத்துவிட்டு தப்பியுள்ளார். மேலும், இளம்பெண்ணின் செல்போனை எடுத்து அவரது தங்கைக்கு காதல் விவகாரத்தில் தாம் தற்கொலை செய்து கொள்வதாக மெசேஜ் அனுப்பினார்.
இதனால், அதிர்ச்சி அடைந்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஆட்டோ டிரைவர் ஜாபர்அலியிடம் விசாரணை நடத்திய போது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜாபர்வாலி கொடுத்த தகவலின் பேரில் ஏரிக்கரையில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜாபர்வாலியை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.