சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்துக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க;- தமிழகத்தை உலுக்கிய பள்ளிக்குழந்தைகள் கொலை வழக்கு... தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தின் முட்டம் கிராமத்தில் பிறந்த ஜே. பங்குராஜ் என்ற என்ற ஜேப்பியார் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். காவல்துறையில் கான்ஸடபிளாகப் பணியாற்றியவர். அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது உறுப்பினரானார். பின்னர் எம்.ஜி.ஆரின் தளபதியாக விஸ்வரூபமெடுத்த அவர் அன்றைய அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலராக செயல்பட்டார். 

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கி கல்வி நிறுவனங்களில் கவனம் செலுத்தினார். 1988-ம் ஆண்டு சத்தியபாமா பொறியியல் கல்லூரியை நிறுவினார். பின்னர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றையும் உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கி உள்ளார். மேலும், ஜேப்பியார் குடிநீர், பால், இரும்பு, சிமெண்ட் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டவர்.

இதையும் படிங்க;- டியூசன் மாணவிகளுக்கு செக்ஸ் பிராக்டிக்கல்... லேப்டாப்பில் காதலனுடன் நிர்வாண வீடியோக்களை ரசித்து உல்லாசம்... சஞ்சனா டீச்சர் பரபரப்பு வாக்குமூலம்..!

இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக 25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி குழுத்தின் நிர்வாகிகள் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 6 மணிமுதல் இந்த சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆகையால், இந்த சோதனை சில நாட்கள் தொடர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.