Asianet News TamilAsianet News Tamil

சென்னை காசி திரையரங்கு அருகே பயங்கரம்.. சிக்னலைக் கடக்க முயன்ற ஐடி ஊழியர்.. அரசு பேருந்து மோதி பலி.!

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே சிக்னலைக் கடக்க முயன்ற  ஐடி பொறியாளர் ரிஷி கெளதம் மீது எதிர்பாராத விதமாக அரசு விரைவு பேருந்து மோதியது.

IT employee killed in government bus collision in chennai tvk
Author
First Published Oct 4, 2023, 10:44 AM IST

சென்னை அருகே சிக்னலைக் கடக்க முயன்ற  ஐடி ஊழியர் மீது அரசு விரைவு பேருந்து மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

சென்னையின் பரபரப்பான சாலைகளில் ஒன்றானது கிண்டியில் இருந்து வடபழனி வழியாக கோயம்பேடு செல்லும் சாலை. 24 மணி நேரமும் பரபரப்பாகவே இந்த சாலைகள் காணப்படும். குறிப்பாக காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் முண்டியடித்துக்கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில், சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே சிக்னலைக் கடக்க முயன்ற  ஐடி பொறியாளர் ரிஷி கெளதம் மீது எதிர்பாராத விதமாக அரசு விரைவு பேருந்து மோதியது. இந்த விபத்தில் ரிஷி கெளதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: இன்னைக்குன்னு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக  கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரிஷி கெளதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  அடிச்சு ஊத்தும் கனமழை.. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios