- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: இன்னைக்குன்னு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?
Power Shutdown in Chennai: இன்னைக்குன்னு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அடையார்:
டைடல் பார்க் சிபிடி வளாகம், கானகம் வீட்டுவசதி வாரியம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்.
ஈஞ்சம்பாக்கம்:
அக்கரை கிராமம், அல்லிக்குளம், அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு & தெற்கு, காப்பர் கடற்கரை சாலை, இசிஆர், கக்கன் தெரு, கஸ்தூரிபாய் நகர், நீலாங்கரை குப்பம், பனையூர் குப்பம், ராஜீவ் அவென்யூ, திருவள்ளூர் சாலை, டிவிஎஸ் அவென்யூ, விஓசி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்.
ஆவடி:
சோத்துப்பெரும்பேடு காரனோடை, தேவநேரி, சிறுனியம், ஒரக்காடு, ஞாயிறு, நெற்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.