US navy ship : chennai: இந்தியாவுக்கு முதன்முறையாக வந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்: காரணம் என்ன?
இந்தியாவுக்கு அதிலும் சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு முதல்முறையாக அமெரிக்க கடற்படைக் கப்பல் சார்லஸ் ட்ரூ வந்துள்ளது.
இந்தியாவுக்கு அதிலும் சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு முதல்முறையாக அமெரிக்க கடற்படைக் கப்பல் சார்லஸ் ட்ரூ வந்துள்ளது.
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள லார்சன் அன்ட் டூப்ரோ கப்பல் கட்டும் தளத்துக்கு முதல்முறையாக அமெரிக்க கடற்படைக் கப்பல் வந்துள்ளது இதுதான் முதல்முறையாகும்.
அமெரிக்க கடற்படையில் கடந்த 2010ம் ஆண்டு சார்லஸ் ட்ரூ கப்பல் சேர்க்கப்பட்டது. இந்த கப்பலின் முக்கியக் பணிகள் ராணுவத்துக்கு தேவைாயன தளவாடங்கள், எரிபொருட்கள், ஆயுதங்கள், உ ணவுகள் உள்ளிட்டவற்றை வழங்குவதாகும். அமெரிக்கக் கப்பலுக்கு மட்டுமல்லாமல் இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் உதவி தேவைப்படும் எந்தக் கப்பலுக்கும் இந்த சார்லஸ் ட்ரூ உதவிகளைச் செய்து வந்தது.
ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க கூட்டு நடவடிக்கை தேவை… பிரதமர் மோடி அறிவுறுத்தல்!!
இப்போது காட்டுப்பள்ளி லார்சன் அன்ட் டூப்ரோ கப்பல் கட்டும் துறைமுகத்துக்கு, பழுதுநீக்கும் பணிக்காக சார்ஸ் ட்ரூ கப்பல் வந்துள்ளது. இந்தக் கப்பல் இங்கு ஒரு வாரம் வரை நிறுத்தப்படும். 689 அடி நீலம், 41 ஆயிரம் டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் சார்ல ட்ரூ கப்பலுக்கு உண்டு. கப்பலில் 63 வீரர்கள், ஊழியர்கள் உள்ளனர்.
பாதுகாப்புத்துறைச் செயலாலர் அஜய் குமார், கப்பற்படை துணைத் தலைவர் எஸ்என் கோர்மடே, தமிழகம், புதுச்சேரி கமாண்டிங் அதிகாரி, எஸ் வெங்கட் ராமன், பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் ஆகியோர் அமெரிக்க கப்பலை வரவேற்றனர். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜுடித் ராவின், பாதுகாப்புத்துறை அதிகாரி, மேக்கேல் பேக்கர் ஆகியோரும் வந்திருந்தனர்.
விடாது சீறும் கேசிஆர்.. மீண்டும் மோடியுடன் மோதல்..நிதி ஆயோக் கூட்டத்தை புறகணித்து கடிதம்..
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கப்பல் பழுதுநீக்கும் பணிக்காக சென்னை வந்துள்ளதும், இந்தியாவுக்கு வருவதும் இதுதான் முதல்முறையாகும். அமெரிக்க ராணுவக் கப்பல் இந்தியாவுக்கு வருவதன் மூலம் இரு நாடுகளின் நட்புறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத்துறைச் செயலாலர் அஜய் குமார் கூறுகையில் “ அமெரிக்க கடற்படைக்கப்பல் சார்லஸ் ட்ரூவை நாங்கள் இன்முகத்துடனஅ வரவேற்கிறோம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடையும், இரு தரப்பு ஆழமான உறவுக்கான தொடக்காக இருக்கும். இந்தியா-அமெரிக்க இடையிலான ராஜாங்கரீதியான உறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்
விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.. இஸ்ரோ தலைவர் சோம்நாத்
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 7ம் தேதி முதல் 17ம் தேதிவரை அமெரிக்காவின் சார்லஸ் ட்ரூ கப்பல் நிறுத்தப்படும். கப்பலில் என்ன மாதிரியான சேதங்கள் ஏற்பட்டுள்ளது, எந்தெந்த பாகங்களில் பழுது ஏற்பட்டுள்ளது என்பது குறித்து லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தால் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.