விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.. இஸ்ரோ தலைவர் சோம்நாத்
எஸ்எஸ்எல்வி ராக்கேட் சற்றுமுன் விண்ணில் நிலைநிறுத்திய 2 செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து பேசிய அவர், செயற்கை கோள்களில் இருந்து சிக்னலை பெற தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் விரைவில் இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். EOS - 02, ஆஸாதிசாட் எனும் செயற்கைக்கோள்களுடன் குறைந்த எடையுள்ள எஸ்எஸ்எல்வி ராக்கேட் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் எஸ் எஸ் எல் வி ராக்கேட்டியிலிருந்து முன்னேரே செயற்கை கோள்கள் வெளியேறியதால் அதனை நிலைநிறுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கிய கல்விசார் செயற்கைக்கோள் உடன் விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்
இரண்டு செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ராக்கேட்டின் அனைத்து கட்டங்களும் எதிர்பார்த்தப்படி ராக்கேட் சென்றது. ஆனால் ராக்கேட்டியிலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களிலிருந்தும் சிக்னல் கிடைக்கவில்லை.சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.