Asianet News TamilAsianet News Tamil

ஆதார், பான் கார்டு மூலம் லோன் கிடைக்குமா? இந்த மாதிரி மோசடியில் மாட்டிக்காதீங்க...

தனது உறவினர்கள் தன்னிடம் வந்து பணம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று கவலையில் மூழ்கிய நிர்மலா தேவி வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நல்வாய்ப்பாக அக்கம்பக்கத்தினர் அவரை தக்க சமயத்தில் காப்பாற்றிவிட்டனர்.

How a house maid got cheated after sharing Aadhaar and PAN for bank loan sgb
Author
First Published Feb 21, 2024, 12:07 PM IST

சென்னை திருவல்லிக்கேணியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளைப் பெற்றுக்கொண்டு ரூ.45 லட்சம் பணத்துடன் தலைமறைவான தாய் மற்றும் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் விக்டோரியா விடுதிக்குப் பின்னால் உள்ள குடிசைப் பகுதியில் வசிப்பவர் நிர்மலா தேவி. இவர் திருவல்லிக்கேணியில் உள்ள சுபத்ரா தேவி என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுபத்ரா தேவி நிர்மலாவின் வீட்டு வறுமை நிலையைக் காரணமாகக் கூறி ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ளார். அதற்காக நிர்மலாவின் ஆதார் மற்றும் பான் கார்டுகளையும் கேட்டிருக்கிறார். சுபத்ரா தேவி பணம் பெற்றுத் தருவதாகச் சொன்னதை நம்பி நிர்மலாவும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை  அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும், தன்னைப்போல தனது உறவினர்களுக்கும் பணம் பெற்றுக் கொடுக்குமாறு கூறி அவர்களின் ஆதார், பான் அட்டைகளையும் வாங்கி சுபத்ரா தேவியிடம் கொடுத்திருக்கிறார் நிர்மலா. ஆனால், கார்டுகளை வாங்கிக்கொண்ட சுபத்ரா தேவியும் அவரது மகன் ராஜதுரையும் அந்த ஆவணங்களைக் காட்டி வங்கிகளில் ரூ.45 லட்சம் வரை கடன் பெற்று தலைமறைவாகிவிட்டனர்.

இந்த 8 ஷார்ட்கட் தெரியாம எதுவும் செய்ய முடியாது! எல்லா டாஸ்க்கையும் சிம்பிளா முடிக்க இதுதான் வழி!

How a house maid got cheated after sharing Aadhaar and PAN for bank loan sgb

நிர்மலா தேவி பணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், வங்கி அதிகாரிகள் வந்து அவர் வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்துமாறு கேட்டுள்ளனர். அப்போதுதான் நிர்மலா தேவி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். சுபத்ரா தேவி அவர் பெயரில் அவரது உறவினர்கள் பெயரிலும் வங்கியில் கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்டது தெரியவந்தது.

இச்சூழலில் தனது உறவினர்கள் தன்னிடம் வந்து பணம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று கவலையில் மூழ்கிய நிர்மலா தேவி வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நல்வாய்ப்பாக அக்கம்பக்கத்தினர் அவரை தக்க சமயத்தில் காப்பாற்றிவிட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள திருவல்லிக்கேணி போலீசார், தலைமறைவாக இருக்கும் சுபத்ரா தேவி மற்றும் அவரது மகன் ராஜதுரை இருவரையும் தேடி வருகின்றனர்.

ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை யாரிடம் பகிரக்கூடாது என்று துறைசார்ந்த நிபுணர்களும் காவல்துறையினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க  தனிப்பட்ட ஆவணங்களை பிறரிடம் கொடுக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

லட்ச ரூபாய்க்கு 10 காயினாகக் கொடுத்து ஏதர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய இளைஞர்!

Follow Us:
Download App:
  • android
  • ios