இந்த 8 ஷார்ட்கட் தெரியாம எதுவும் செய்ய முடியாது! எல்லா டாஸ்க்கையும் சிம்பிளா முடிக்க இதுதான் வழி!
தினமும் வேலை நிமித்தமாகவும் பிற தேவைகளுக்காகவும் தினமும் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பயன்படுத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் கணினி பயன்பாடு வந்துவிட்ட நிலையில், அனைவரும் சில கம்ப்யூட்டர் ஷார்ட்கட்களை தெரிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
Ctrl + C (Copy)
Ctrl + C (Copy) - செலக்ட் செய்த டெக்ஸ்ட் அல்லது ஃபைலை கிளிப்போர்டில் காப்பி செய்ய இந்த ஷார்ட்கட் பயன்படுகிறது. பின்னர் இதை தேவையான இடங்களில் பேஸ்ட் செய்யலாம்.
Ctrl + X (Cut)
Ctrl + X (Cut) - செலக்ட் செய்த டெக்ஸ்ட் அல்லது ஃபைலை இருக்கும் இடத்தில் இருந்து அகற்றி கிளிப்போர்டில் சேமிக்க பயன்படுகிறது. அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஷார்ட்கட்களில் ஒன்று இது.
Ctrl + V (Paste)
Ctrl + V (Paste) - கிளிப்போர்டில் சேமிக்கப்பட்டுள்ள டெக்ஸ்ட் அல்லது ஃபைலை கர்சர் இருக்கும் இடத்தில் இடம்பெற வைக்க பயன்படுவது.
Ctrl + Z (Undo)
Ctrl + Z (Undo) - கடைசியாகச் செய்த செயலைத் தவிர்க்க இந்த ஷார்ட்கட் உதவுகிறது. தவறு நேரும்போது அதை சரிசெய்ய இது எளிய வழி. அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஷார்ட்கட் இது.
Ctrl + Y (Redo)
Ctrl + Y (Redo) - கடைசியாக செய்து தவிர்க்கப்பட்ட செயலை மீண்டும் செய்ய வைக்கிறது. ஏற்கெனவே செய்த செயலை திரும்பச் செய்ய இது ஈசியான வழி. இதுவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஷார்ட்கட் ஆகும்.
Ctrl + S (Save)
Ctrl + S (Save) - பயன்பாட்டில் இருக்கும் கோப்பை சேமிக்க இந்த ஷார்ட்கட் உதவுகிறது. இதை பயன்படுத்தி புதிய கோப்பை கணினியில் சேமித்து வைக்கவும் முடியும். எதிர்பாராத விதமாக கோப்பு அழிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய இது மிக முக்கியமானது.
Ctrl + P (Print)
Ctrl + P (Print) - திறக்கப்பட்ட ஆவணம் அல்லது கோப்பை அச்சிடுவதற்கான விண்டோவைத் திறக்க இந்த ஷார்ட்கட் பயன்படும். பிரிண்டருடன் இணைக்கப்பட்ட சிஸ்டம் பயன்படுத்தும் நபர் இதை தினசரி பயன்படுத்த வேண்டியிருக்கும்.
Ctrl + A (Select All)
பயன்பாட்டில் உள்ள கோப்பில் உள்ள அனைத்து டெஸ்க்டையும் செலக்ட் செய்யவோ, ஒரு விண்டோவில் உள்ள அல்லது கோப்புகளையும் செலக்ட் செய்யவோ இது பயன்படும்.