சென்னையில் கனமழை பெய்ததன் எதிரொலி... வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!
சென்னையில் பெய்து வரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய மீனவர்கள் மீது இந்திய காவல்படையினரே தாக்குதல்.. கொந்தளிக்கும் மீனவர்கள் கூட்டமைப்பு !
மேலும் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சென்னையில் பெய்துவரும் மழையால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. மழை நீர் வடிக்காலுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: இரண்டாவது விமான நிலைய உருவாக்கம் என்பது காலத்தின் கட்டாயம்... பரந்தூர் விமான நிலையம் பற்றி தமிழக அரசு கருத்து!
இதேபோல் பல்வேறு இடங்களில் மக்கள் பலர் மழை நீர் தேங்கியிருப்பதால் திறந்துக்கிடக்கும் குழிகளில் விழுந்துவது ஆங்காங்கே நடந்து வருகிறது. இதனிடையே கனமழை காரணமாக சென்னை பாரிமுனையில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் இருக்கும் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.