ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய விவகாரம்... அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு!!

தமிழகத்தில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறு நாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

highcourt ordered the police to file a report in matter of giving permission for the RSS  procession

தமிழகத்தில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறு நாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து அவ்வமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து உரிய அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

இந்த வழக்குகள் கடந்த முறை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நவம்பர் 6 ஆம் தேதி அன்று  ஊர்வலத்தை நடத்தும் படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது பற்றி புகாரளித்தும் நடவடிக்கை இல்லை… விரக்தியடைந்த பெண் தீக்குளிக்க முயற்சி!!

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிலவும் சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து இடையூறு, ஊர்வலத்தில் பங்கேற்ப்பவர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபந்தனைகளை விதித்து நவம்பர் 6 ஆம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளாதாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அப்போது, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அனுமதியளிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவில் கூறப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவை மீறி, பல மாவட்டங்களில் ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கை முடித்து வைக்க கூடாது என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவிட்டப்படி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய  காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios