தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் கிரைம் டிஜிபியாக இருந்த அம்ரேஷ் பூஜாரி தமிழக சிறைத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது பற்றி புகாரளித்தும் நடவடிக்கை இல்லை… விரக்தியடைந்த பெண் தீக்குளிக்க முயற்சி!!
இதேபோல் ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த அபாய் குமார் சிங் சிபிசிஐடி கிரைம் பிராஞ்ச் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக ஏடிஜிபியாக இருந்த வெங்கடராமன் நவீனமயமாக்கல் துறை கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
இதையும் படிங்க: எங்களுக்கு பீர் மட்டும் போதும் தல.! டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள் - அதிர்ச்சி சம்பவம்
அதேபோல் சென்னை ஐஜி ராதிகா சென்னை ஆயுதப்படை ஐஜியாக மாற்றப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே சிறைச்சாலை மற்றும் சீர்த்திருத்த நிர்வாகத்தில் பணிபுரிந்த சுனில் குமார் சிங், கிரைம் பிராஞ்ச் ஏடிஜிபி ஷகில் அக்தர் ஆகியோர் பணி ஓய்வு பெறுகின்றனர்.