தன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது பற்றி புகாரளித்தும் நடவடிக்கை இல்லை… விரக்தியடைந்த பெண் தீக்குளிக்க முயற்சி!!

தனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்காததால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

woman tried to set herself on fire after complaining about the encroachment of her place but no action was taken

தனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்காததால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ராமு. 56 வயதான இவருக்கு ஒப்பந்த அடிப்படையில் இடம் ஒன்று மேலப்பாளையம் பகுதியில் இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்தபோது அவரது இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்துள்ளார்.

இதையும் படிங்க: எங்களுக்கு பீர் மட்டும் போதும் தல.! டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள் - அதிர்ச்சி சம்பவம்

woman tried to set herself on fire after complaining about the encroachment of her place but no action was taken

இதை அடுத்து காவல்துறை உள்ளிட்ட பல இடங்களில் ராமு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராமு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க: ஒரு குறிப்பிட்ட சமூக குழந்தைகளுக்கு தின்பண்டம் தர மறுத்த வழக்கு… கடை உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன்!!

மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் இராமுவை காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios