மீண்டும் மிரட்டப்போகிறதா கனமழை? எந்த பகுதி தெரியுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்..!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
வரும் நாட்களில் மழை தாக்கம் எப்படி இருக்கும், புயல் உருவாக வாய்ப்புள்ளதாக என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாளை உள்ளிட்ட மாவட்டங்களில் 122 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க;- அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்
அதிகபட்சமாக சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதற்கு மேக வெடிப்புகளே காரணம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார். தற்போது அடுத்த மழை எப்போதும் பெய்ய போகிறது, எங்கெல்லாம் பெய்யும் என முக்கிய தகவலை பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- நாளை காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொஞ்சம் மழை அதற்கு பிறகு ஒரு வார வறண்ட வானிலையே இருக்கும். காலை நேரங்களில் பனியை கூட உங்கள் வாகனங்களில் பார்க்க முடியும்.
பள்ளி செல்லும் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை குறைத்து வைக்கவும் (குன்றத்தூர் பசங்களை தவிர), konjam kastam thaan.நாளை தென் தமிழக பகுதி குமரி, நெல்லை, தூத்துக்குடி அருகில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும். கொங்கு பெல்ட் பகுதிகளில் நல்ல மழை பொழியும். அடுத்த மழை 20ம் தேதி தொடங்கலாம். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன் பின் இருக்கலாம். அது புயலாகவும், தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த சீசனில் நமக்கு முதல் சக்கரமாக இருக்கலாம். அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- சீர்காழியில் இரவுக்குள் மின் விநியோகம் சரி செய்யப்படும்… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!!