சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் போட்டு தாக்கப்போகுதாம் கனமழை..!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy rain in next 3 hours in 10 districts including Chennai tvk

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று பவர் கட்! எத்தனை மணிநேரம்? எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

இதனிடையே நேற்று இரவு சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதேபோல், விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 

இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டா ஆவணங்களை டவுன்லோட் பண்ணலாம்! இதுதான் சிம்பிள் வழி!
 
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமாலை, விழுப்புரம், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios