இனிமே தான் வெயிலின் ஆட்டமே இருக்கு.. ஜாக்கிரதையா இருங்க.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..

தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் வெப்ப அலை வீசும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Heat wave kick in tamilnadu from thursday says tamilnadu weatherman pradeep john chennai weather update Rya

கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மே மாத அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.

School College Holiday: குட்நியூஸ்.! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் வெப்ப அலை வீசும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சென்னை தனது 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை இந்த வார இறுதியில் காணலாம். டெல்டா மற்றும் வட தமிழகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும்.. தமிழகத்தின் உள்பகுதியில் சில இடங்களில் வெப்பநிலை 42 செல்சியஸ் அளவை தாண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தென் தமிழகத்தில் அதாவது தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இன்று மழை பெய்யும். ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து 40 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டும். சென்னையில் இந்த வாரம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

சென்னையின் உள்பகுதிகளில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடலோர பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். அதே போல் வட தமிழக பகுதிகளான, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் இந்த வாரம் வெப்பநிலை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி மௌன குருவாக இருப்பது ஏன்?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

இதனிடையே தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios