2024ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம்! மதுரையிலிருந்து சில விமானங்களை இயக்க நடவடிக்கை!
வருகின்ற 2024 ஆம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து விமானம் மூலம் ஹஜ் பயணம் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் பேட்டி
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான பக்ரீத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜூம்மா மசூதியில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.இதில் அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் தொழுகையில் பங்கேற்று பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், அகில இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் தின வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் அனைத்து இஸ்லாமிய மக்களும் தங்களின் இல்லங்களில் பிரியாணி உணவினை சமைத்து நண்பர்களாக இருக்கும் இந்து சமுதாய மக்களுக்கு தங்களது அவர்களது இல்லங்களுக்கு சென்று கொடுத்து பக்ரீத் திருநாளை கொண்டாட வேண்டும். இதுவே பாதுகாப்பான சமுதாயத்துக்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கும் எனவும் கூறினார்.
மேலும் இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து 18 லட்சத்து 45 ஆயிரத்து 45 நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 164 நபர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 421 நபர்கள் இந்திய ஹஜ் கமிட்டி சார்பிலும் 34,635 நபர்கள் தனியார் ஹஜ் நிறுவனங்கள் சார்பிலும் ஹஜ் பயணம் பூர்த்தி செய்து இருக்கிறார்கள்.
எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் பக்ரீத்! முதல்வர் ஸ்டாலின் முதல் ஆளுநர் வரை வாழ்த்து.!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3954 நபர்கள் புனித ஹஜ் பயணத்தை நிறைவு பெற்று தமிழகம் திரும்ப உள்ளார்கள். மேலும் ஹஜ் பயணம் முடித்து வருகின்ற திங்கட்கிழமை முதல் விமானம் மூலம் புதுடெல்லி வருகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் விமானம் ஜூலை 15ஆம் தேதி வருகிறது. இந்த ஆண்டு நமது நாட்டைச் சேர்ந்த 20 ஹாஜிகள் மரணமடைந்துள்ளனர் இதில் ஒரே ஒரு பெண் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அவர் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
கொரோனா இடைவேளைக்குப் பிறகு 2023 நடைபெற்ற ஹஜ் பயணம் மட்டுமே முழுமையாக நடைபெற்றது .மேலும் வருகின்ற 2024 ஹஜ் பயணம் மதுரையில் இருந்தும் ஒரு சில விமானங்கள் இயக்கம் மத்திய அரசு பரிசளித்து வருகிறது.எனவே மதுரை மாநகரை சுற்றியுள்ள மக்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான சிறப்பான வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.