சென்னையில் ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னையில் ஆணழகன் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் ஜிம்மிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் (வயது 41). இவருக்கு திருமணமாகி 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கொரட்டூரில் உள்ள ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது உடல் சோர்வானதால் குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரில் குளித்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உடற் பயிற்சி செய்ய வந்தவர்கள் கழிவறையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது யோகேஷ் கழிவறையில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளனார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பயிற்சியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தமிழகத்தையே உலுக்கிய அரியலூர் பட்டாசு ஆலை விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
அங்கு யோகேசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். யோகேஷ் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டிக்காக கடுமையாக தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் திடீரென ஜிம்மிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை கொரட்டூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D