தமிழகத்தையே உலுக்கிய அரியலூ பட்டாசு ஆலை விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

cm mk stalin announced compensation who died fireworks accident in ariyalur district vel

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய இருவர்; அவமானம் தாங்காமல் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன்.

ஆந்திராவில் அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 5 பேர் பலி

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன். இவ்விபத்தில் உயிரழிந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios