Asianet News TamilAsianet News Tamil

மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய இருவர்; அவமானம் தாங்காமல் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி

வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பம் ஆக்கியவர்கள் மீது போலீசில் புகார்.குற்றம் சுமத்தப்பட்ட நபர்களில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

A man who raped a mentally challenged women in Tirupattur committed suicide by jumping in front of a train vel
Author
First Published Oct 9, 2023, 2:22 PM IST | Last Updated Oct 9, 2023, 2:22 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி தொழிலாளியான இவருக்கு 1 மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் முடிந்து அவர்கள் கணவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மகனுக்கும் திருமணம் முடிந்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மீதுமுள்ள 2 மகள்கள் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தாய், தந்தையுடன் வீட்டில் வசித்து வருகின்றனர். தினந்தோறும் தந்தை ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கூலி வேலைக்கு சென்று விடுவார்கள்.

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகள் வீட்டிலும் மற்றோர் மகள் சுகன்யா(27) என்பவர் அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு ஆடுகளை மேய்க்க சென்று விடுவார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் (வயது 52 )மற்றும் கோவிந்தன் (வயது 70) ஆகியோர் சுகன்யாவிடம் நைசாக பேசி தொடர்ந்து அவரை இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட சுகன்யா, இது குறித்து அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் பயங்கர விபத்து; 10 பேர் உடல் சிதறி பலி

இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சுகனியாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அங்கு பரிசோதித்த போது சுகன்யா கர்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து மகளிடம்  விசாரித்த போது மாணிக்கம், கோவிந்தன் ஆகியோர் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனை அறிந்த ராஜேந்திரன் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 5 ம் தேதி புகார் செய்தார்.  

புகாரின் அடிப்படையில் மாணிக்கம் மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரிடமும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தி விசாரணை நடத்தினார். இதற்கிடையே இந்த தகவல் ஊர் பிரமுகர்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து அந்த கிராமத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று இந்த புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும்,  இது சம்பந்தமாக ஊரில் பஞ்சாயத்து பேசி அதற்கு ஒரு நல்ல தீர்வை காண்பதாகவும் காவல் நிலையத்தில் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சாந்தி ஊர் பிரமுகர்களிடம் பேசி வரும்படி புகார் மனுதாரரை அனுப்பி உள்ளார்.

தனியார் பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை; தலையில் தட்டி இழுத்துச் சென்ற போலீசார்

ஊரில்  மாணிக்கம் மற்றும் கோவிந்தன் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தல ரூபாய் 4 லட்சம் அளிக்க வேண்டும் என ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் ஒருபுறமும்,  ஊரில் அபராதம் விதிக்கப்பட்ட மனவேதனையில் இருந்த மாணிக்கம் நேற்று காலை நெக்குந்தி என்ற இடத்தில் சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக  பரவியது. 

இதனை அறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது ராஜேந்திரன் அளித்த புகாரின் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு உத்தரவிட்டார். புகாரில் குறிப்பிட்டு இருந்த கோவிந்தன் மற்றும் மாணிக்கம் ஆகியோரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கோவிந்தன் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த சாந்தி என்பவர் இந்த வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்டதை தொடர்ந்து அவர் உடனடியாக  மகளிர் காவல் நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும், அந்த பணியிடத்தில் நாட்றம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மலர் என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக வேலூர் சரக டிஐஜி நியமித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios