போன் இணைப்பை துண்டித்த காதலி.. விரக்தியில் யோசிக்காமல் தீக்குளித்த காதலன்.. சென்னையில் பயங்கரம்.!

காதலி தன்னுடன் பேச மறுத்ததால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Girlfriend refused to talk to him.. Boyfriend suicide attempt

காதலி தன்னுடன் பேச மறுத்ததால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (24). சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கியுள்ளார். அதேபகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 6 மாதமாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன், இரவில் பிரகாஷ், தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த காததலி செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். 

இதையும் படிங்க;- ஒதுக்குப்புறமாக உல்லாசம்.. கள்ளக்காதலி சொன்ன அந்த ஒருவார்த்தை.. வேலை முடிந்ததுமே கள்ளக்காதலன் செய்த பயங்கரம்!

இதனால் விரக்தி அடைந்த பிரகாஷ் தனது வீட்டில் இருந்த பெயின்ட் கலக்க பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், பிரகாஷ் அலறியடித்துக்கொண்டு சாலைக்கு ஓடிவந்தார்.

 இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் அவரது உடலில் கோணியை போர்த்தி  தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  பள்ளி மாணவி 10 மணி நேரம் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.. வேலை முடிந்ததும் சாலையில் தூக்கி வீசப்பட்ட கொடூரம்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios