இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன் இன்றுமுதல் விநியோகம்; பெறுவது எப்படி?

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
 

Free token distribution for free mtc bus travel for senior citizens in chennai started

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. தற்போது வழங்கப்படும் டோக்கன்களை ஜூன் 2023 வரை பயன்படுத்த முடியும்.

பருப்பு வடைக்குள் இருந்த சுண்டெலி; வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஒரு நபருக்கு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் ஆறு மாதத்திற்கு 60 டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூத்த குடிமக்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துப் பணிமனைகளில் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.

அடையாள அட்டையை புதுப்பிக்க விரும்புபவர்கள், இலவச பயண டோக்கன் பெற விரும்புபவர்கள் தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும்.

நம்ம ஸ்கூல் திட்டத்தில் ஒரே நாளில் குவிந்த ரூ.50 கோடி; கல்வியாளர்கள் பாராட்டு

முதல் முறையாக இலவச பயண டோக்கன் பெற விரும்புவோர், இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டையின் நகல், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். தாங்கள் கொண்டு வரும் அடையாள அட்டை நகல்களின் அசலையும் கொண்டு வரவேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios