கடவுளே இது மாதிரி யாருக்கும் நடக்க கூடாது.. மகள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் மரணம்.!

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் நடைமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. சத்யாவும், அவரது தோழியும் ரயிலில் ஏறி செல்வதற்காக தயாராக இருந்தனர். ஆத்திரத்தில் இருந்த சதீஷ், சத்யாவை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். அப்போது ரயிலின் முன்பகுதியில் மோதியபடி சத்யா தண்டவாளத்தில் விழுந்ததில் ரயில் சக்கரம் ஏறியதில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

Father dies of heart attack in shock of daughter's murder in chennai

ரயில் முன் தள்ளிவிட்டு மகள் சத்யா கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை  ஆலந்தூரில் ராஜா தெரு உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமலட்சமி(43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சத்தியா (20). இவர் தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரயில் மூலம் தி.நகர் செல்வது வழக்கம். சத்தியா வசித்து வரும் போலீஸ் குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் (23). டிப்ளமோ படித்துள்ளார். சத்யா, சதீஷ் ஆகியோரின் வீடு எதிரெதிரே என்பதாலும், இருவரும் போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- ரயில் வரும் போது காலால் எட்டி உதைத்து கல்லூரி மாணவி கொலை.. பதுங்கி இருந்த கொடூர காதலன் கைது..!

Father dies of heart attack in shock of daughter's murder in chennai

இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரியவந்தது. இவர்களது காதலுக்கு சத்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சத்யா சதீஷிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனாலும்,  சதீஷ், சத்யாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனிடையே, சத்யாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த தகவல் காதலன் சதீசுக்கு தெரியவந்தது. உடனே சதீஷ் நேற்று வழக்கம் போல் சத்யா கல்லூரி செல்ல தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்ததும் பின் தொடர்ந்து நேரில் வந்து இதுதொடர்பாக கேட்டுள்ளார். ஆனால், இதுதொடர்பாக பதில் கூறாமல் தள்ளி சென்றார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

Father dies of heart attack in shock of daughter's murder in chennai

அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் நடைமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. சத்யாவும், அவரது தோழியும் ரயிலில் ஏறி செல்வதற்காக தயாராக இருந்தனர். ஆத்திரத்தில் இருந்த சதீஷ், சத்யாவை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். அப்போது ரயிலின் முன்பகுதியில் மோதியபடி சத்யா தண்டவாளத்தில் விழுந்ததில் ரயில் சக்கரம் ஏறியதில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, காதலன் அங்கிருந்து உடனே தப்பி சென்றுவிட்டார். 

Father dies of heart attack in shock of daughter's murder in chennai

பின்னர், சத்யா உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, மகள் செய்யப்பட்ட செய்தியை அறிந்து வேதனையில் இருந்த சத்யாவின் தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உறவினர்கள் உடனே அவரை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மகள் சத்யா உடல் வைக்கப்பட்டிருக்கும் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையிலேயே தந்தை மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- திருமணமான பெண்ணை தூக்கிச் சென்று, தனி அறையில் கட்டிவைத்து பலமணிநேரம் உல்லாசம்.. மருத்துவமனையில் சிகிச்சை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios