சென்னை பரங்கிமலை ஓடும் ரயில்முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் சதீஷை தனிப்படையினர் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை பரங்கிமலை ஓடும் ரயில்முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் சதீஷை தனிப்படையினர் போலீசார் கைது செய்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமலட்சமி(43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மாணிக்கம்(47), சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் சத்யா தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் ஓய்வு பெற்ற காவலரின் மகன் சதீஷ்(23). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே சத்யா பள்ளியில் படிக்கும் போதே சத்யாவை பின் தொடர்ந்து வந்துள்ளார். நாளடைவில் சதீஷ் மற்றும் சத்யா ஆகிய இருவரின் நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் கத்யா வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து தனது மகளை தாய் கண்டித்துள்ளார். 

இதையும் படிங்க;- மருமகள் கண்முன்னே நிர்வாணம்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா குழந்தையும் சொத்து தருகிறேன் கூறி மாமனார் சில்மிஷம்.!

அதன் பிறகு சத்யா தனது காதலன் சதீஷ் உடனான நட்பை துண்டித்துள்ளார். இதற்கிடையே சத்யாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த தகவல் காதலன் சதீசுக்கு தெரியவந்தது. உடனே சதீஷ் நேற்று வழக்கம் போல் சத்யா கல்லூரி செல்ல தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்ததும் பின் தொடர்ந்து நேரில் வந்து இதுதொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு சத்யா ஆமாம் என்று கூறி என்னை இனி தொந்தரவு செய்யாதே. தொந்தரவு செய்தால் என் அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ரயில் நிலையத்திலேயே மதியம் அரை மணி நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ரயில் தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையதத்திற்கு வந்துக்கொண்டிருந்த போது சத்யா நடைமேடையில் காத்திக்கொண்டிருந்த போது முதுகில் ஓங்கி தனது காலால் எட்டி உதைத்ததில் நிலை தடுமாறி ரயில் இன்ஜின் முன்பாக தண்டவாளத்தில் கீழே விழுந்தார். இதில் அவர் மீது ரயில் ஏறியதில் சத்யா தலை துண்டித்த நிலையில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனையடுத்து, காதலன் அங்கிருந்து உடனே தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், துரைப்பாக்கத்தில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க;- சிறுவனை மடக்கி உல்லாசம்.. கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி.. 3 மாத கர்ப்பத்தால் அதிர்ச்சி..!