சென்னை ராயபுரம் அருகே இருக்கும் கொத்தவால்சாவடியைச் சேர்ந்தவர் சத்யபிரகாஷ். சொந்தமாக ட்ராவல்ஸ் வைத்திருக்கிறார்.  நேற்று தங்கசாலையில் இருக்கும் கோடக் மகேந்திரா வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரத்தில் 40 ஆயிரம் பணத்தை செலுத்திச் சென்றுள்ளார். 

வங்கி அதிகாரிகள் பணம் செலுத்தும் இயந்திரத்தை சரிபார்த்த போது அதில் 2500 ரூபாய் மதிப்பிலான 5 கள்ளநோட்டுகள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் யாரால் அவை செலுத்தப்பட்டது என்று ஆய்வு செய்தனர். அப்போது சத்யபிரகாஷ் செலுத்திய 40 ஆயிரத்தில் கள்ளநோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.  இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சத்யபிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டனர். கள்ளநோட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று காவலர்களிடம் சத்யபிரகாஷ் தெரிவித்திருக்கிறார். எனினும் அவரை கைது செய்த காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் செலுத்திய 40 ஆயிரத்தில் மீதி பணத்தையும் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரத்திலேயே கள்ளநோட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: தமிழகத்திலும் இனி லட்டு பிரசாதம்..! மகிழ்ச்சியில் பக்தர்கள்..!