தயாளு அம்மாளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. அப்பல்லோ விரைந்த முதல்வர் ஸ்டாலின்..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள்(88) வயது மூப்பு  காரணமான பொதுவெளியில் நிகழ்ச்சிகளை தவிர்த்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

dayalu ammal admitted in apollo hospital

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள்(88) வயது மூப்பு  காரணமான பொதுவெளியில் நிகழ்ச்சிகளை தவிர்த்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதையும் படிங்க;- ஒரே ஒரு போன் கால்..! அரசு நிகழ்ச்சிகள் ரத்து..! கே.என் நேரு உத்தரவிற்காக திருச்சிக்கு ஓடிய அன்பில் மகேஷ்

dayalu ammal admitted in apollo hospital

இந்நிலையில், தயாளு அம்மாளுக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தயாளு அம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- சென்னையில் மழை பாதிப்பு என புகார் கூறும் இபிஎஸ்.! மக்களை காண ஏன் வரவில்லை..? இறங்கி அடிக்கும் சேகர்பாபு

dayalu ammal admitted in apollo hospital

இதனிடையே தாயாரின் உடல்நலக்குறைவை அறிந்த முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வருகை தந்து தயாளு அம்மாளை சந்தித்தார். பின்னர் அவரது உடல்நலம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் அப்பல்லோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கடந்த மார்ச் மாதம் நுரையீரல் பிரச்சினை காரணமாக தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;- ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. கண்டனம் தெரிவித்த குஷ்பு.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.. நடந்தது என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios