உயிர் பலி வாங்கிய மாண்டஸ் புயல்.. அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 2 பேர் பலி
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் லட்சுமி(45) மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலை மற்றும் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ராம்நகர் 7வது தெருவில் லட்சுமி (40) என்பவரும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் (25) உள்ளிட்ட 4 பேர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். வீட்டை மழை நீர் சூழ்ந்ததால் அருகில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் தங்குவதற்காக சென்றுள்ளனர்.
இதையும் படிங்க;- சென்னையில் கோரத்தாண்டவம் ஆடிய மாண்டஸ் புயல்.. வேரோடு சாய்ந்த மரங்கள்.. பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு..!
அப்போது, தண்ணீர் தேங்கியதால் நிலைதடுமாறி லட்சுமி கீழே விழந்துள்ளார். லட்சுமியை பிடிக்க சென்ற ராஜேந்திரனும் தடுமாறி அங்கு விழுந்துள்ளார். அங்கு ஏற்கனவே மின்சார கம்பி அறுந்து கிடந்தது. மின் கம்பியை மிதித்ததில் லட்சுமி(45) மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதனையடுதத்து, தகவல் அறிந்து மின்சார ஊழியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர், மின்சாரத்தை துண்டித்து உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- அநாவசியமாக யாரும் வெளியே வராதீங்க.. பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்..!